-
கடந்த வாரம் உங்களுக்கு பல மருத்துவச் செலவுகள் ரசிது (Leistungsabrechnung) அனுப்பினேன். உங்கள் பணத்தை நான் எப்போது மீண்டும் பெறுவேன்?
சராசரியாக சுமார் 2 வாரங்களுக்குள் மருத்துவச் செலவுகளை நாங்கள் திருப்பிச் செலுத்துகிறோம். பணத்தைத் திரும்பப்பெறுதல் அறிக்கை உங்களைச் சென்றடைய மேலும் ஒரு வாரம் ஆகும்.
-
Sport Club - விளையாட்டு கிளப் செலவுகளை காப்பீடு ஏற்றுக்கொள்ளுமா?
ஆம், நீங்கள் துணை காப்புறுதி ஒன்றை வைத்திருந்தால் அது உங்கள் Sport Club கட்டுமான தொகையில் வருடத்தில் 50% அல்லது 200,- ஃபிரங் ஏற்றுக்கிள்கிறது. உதாரணமாக Tennisclub , Fussclub -க்காக நீங்கள் வருடத்தில் 400,- ஃபிரங் கட்டனமாக செலுத்துகிறீர்கள் என்றால், 200,- ஃபிரங்கை உங்கள் துணை காப்புறுது ஏற்றுக்கொள்கிறது.
-
மறுத்துவ காப்பீடு செய்யும் போது நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை என்ன?
வைத்தியரை தொடர்பு கொள்வதற்கு அடிப்படையில் 4 வித்தியாசப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. இது அணைத்து காப்பீடு நிறுவணங்களுக்கும் பொருந்தும். 1. அடிப்படை வழிமுறை – Standardmodell உங்கள் விருப்படி வைத்தியரை தேர்ந்தெடுக்கலாம். உடல் நல அவதிகள் ஏற்படும் போது, நீங்கள் விரும்பிய வைத்தியரிடம் செல்லலாம் 2. தொலைபேசி வழிமுறை – Telefonmodell உடல் நல அவதிகள் ஏற்படும் போது, தொலைபேசியூடாக மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு, அவர்கள் அளிக்கும் வழிநடத்துதலை பின்பற்ற வேண்டும். 3. குடும்ப வைத்தியர் வழிமுறை – Telefonmodell உடல் நல அவதிகள் ஏற்படும் போது, உங்கள் குடும்ப வைத்தியரை முதலில் நாட வேண்டும். 4. வைத்தியர்கள் வலையமைப்பு வழிமுறை – Ärztenetz உங்கள் குடும்ப வைத்தியராக, காப்பீடு நிறுவணத்தின் பட்டியலில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். உடல் நல அவதிகள் ஏற்படும் போது, உங்கள் குடும்ப வைத்தியரை முதலில் நாட வேண்டும்.
-
எனது எதிர்கால குழந்தைக்கு காப்பீடு செய்ய விரும்புகிறேன். நான் பிரசவத்திற்காக காத்திருக்க வேண்டுமா அல்லது பிரசவத்திற்கு முன் காப்பீட்டை எடுக்கலாமா?
உங்கள் பிறக்காத குழந்தைக்கு மகப்பேறுக்கு முற்பட்ட காப்பீடு செய்யலாம். ஏற்கனவே உங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையின் கவரேஜை நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்கள் நன்மைகள்: மருத்துவக் கேள்வித்தாளை நிரப்புவதைத் தவிர்க்கிறீர்கள், உங்கள் குழந்தை பிறந்தவுடன் அவரது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் காப்பீடு செய்யப்படும். குழந்தை பிறந்த பிறகு "Sophie la Girafe" பரிசையும் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன் " Dentaire Plus 2 " மற்றும் " Mundo " துணை காப்பீட்டிற்கு குழுசேர்வதன் மூலம் , முதல் மூன்று ஆண்டுகளில் வழங்கப்படும் பிரீமியங்களிலிருந்து நீங்கள் பயனடைகிறீர்கள்.